புதிய உலகம்
தர்மயுகம் வரப்போகிறது மக்களே
முன்னே ஸ்ரீ குபேர புரி உதயமாகிறது. அனைவரும் வாருங்கள்.
ஸ்ரீ குபேரபுரியின் வரலாறு
ஸ்ரீ குபேரபுரி — அறிமுகம்
மக்களே நீங்களெல்லாம்
வாழ் பொன்னம்பதியில் சென்று
முக்கியமான தர்மயுக நிலமதிலே தன்னால்
கக்கிய பொன்கள் சொர்ணம், கைமனம் குளிர
அன்னம் பொக்கிஷம் புகழ் நிறைய வைத்து உண்டினிதாய் வாழ்வீர்
என்ற ஐயா வைகுண்ட பரம்பொருளின் வாக்கிற்கு இணங்க நம் குபேரபுரியானது ஈசாந்திமங்கலம் பகுதியில் உள்ள
'ஸ்ரீ குபேரபுரி' - யில் 'ஸ்ரீ குபேர லிங்கேஸ்வரா' ஆலயமானது மிகப் பிரம்மாண்டமாக வளர ஆரம்பித்துள்ளது.
ஸ்ரீ குபேரபுரியின் வரலாறு
ஆதியில் பூமி தோன்றும் போதே தொடங்கிவிட்டது. நமது 'ஸ்ரீ குபேரபுரி'-யின் வரலாறும் காரணம் கிறிஸ்தவர்களின்
புனித நூலான பைபிளில் ஆதியாகமம் — அதிகாரம் 1, வசனம் 1, 2:
ஆதியாகமம் — அதிகாரம் 1 : வசனம் 1, 2
- ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
- பூமியானது ஒழுங்கின்மையும், வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின் மேல் இருள் இருந்தது. தேவ
ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார் என்று உள்ளது.
அந்த தேவ ஆவியான ஸ்ரீ பகவான் நாராயணரின் உயிர் சக்தியே அல்லது ஆத்ம சக்தியே பரம்பொருள் சிவனாவார். அவரே
ஸ்ரீ குபேர லிங்கேஸ்வரா என்று அழைக்கப்படுகிறார்.
மேலும் உலகில் தோன்றிய பல்வேறு அவதாரப் புருஷர்களும், ஞானிகளும் புகழ் மணக்கும் நம் குபேரபுரி குறித்து
பல்வேறு இடங்களில் மக்களுக்கு தெரிவித்துள்ளார்கள். அவையாவன:
வெளிப்படுத்தல் 21 : வசனம் 10, 11
10. பெரிதும் உயரமான ஒரு பர்வதத்தின் மேல் (மலையின் மேல்) என்னை ஆவியில் கொண்டு போய் தேவனுடைய
மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தை விட்டு தேவனிடத்திலிருந்து இறங்கி வருகிறதை
எனக்கு காண்பித்தான்.
11. அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக் கல்லைப் போலவும் பளிங்கொளியுள்ள வச்சிரக்கல்லைப்
போலவும் இருந்தது, என்ற வசனத்தின் படியும்
மேலும் கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு பகுதியில் தோன்றி முடிசூடும் பெருமாள் என்ற நாமத்துடன்
வாழ்ந்த ஐயா வைகுண்டர், இவர். பரம்பொருள் நாராயணரின் கலியுக அவதாரமாவார். இவர் கலியுகத்தை முடித்து
வைத்து தர்மயுகத்தை தோற்றுவிக்க நானே வேறு ஒரு உடலில் தோன்றி வந்து 'ஸ்ரீ குபேரபுரி' என்ற பட்டணத்தை
உருவாக்க வருவேன் என்ற வார்த்தைகளின்படி இவர் குறித்த விவரங்கள் அறிய:
அவர் இயற்றியுள்ள அகிலத்திரட்டு நூல் — பக்கம் 220
ஒர் புதுமை உண்டாகும் மகனே
தெச்சணா மூலை தென் பாற்கடலருகே
மெச்சுபதி மூலம் விளக்கு எரிய கண்டு
உனது காலம் இது மகனே.
கன்னி திரு தென் திசையில் கோபுர மண்டபமும்
கொடிமரமும் வீதிகளும்
தன்னால் தலங்கள் மிகத்
துலங்கும் காலம் இது மகனே கண்மணியே...
மேலும் அவர் கன்னியாகுமரியில் ஆலயம் தோன்றும் என்றும் இவ்வாறு கூறுகின்றார்:
அகிலத்திரட்டு — பக்கம் : 221
வாரிக் கரையிலே மண்டபம் ஒன்றே
வளர்ந்து நாரிகள் கூட நாடெங்கும்
வாசமிட்டு ஒரு குடைக்குள் ஆழ்வார்
உன் காலம் என் மகனே.
மேலும் அவர் இது ஒர் சிவன் ஆலயமாக இருக்கும் என்பதை இவ்வாறு கூறுகின்றார்:
அகிலத்திரட்டு — பக்கம் : 221
சிலையுள்ளே தோன்றி சிவ தோத்திரமாக
நிலையொன்றாய் ஆகி நீ ஆள்வாய்
உன் காலம்
என நம் சிவன் சிலையென 'ஸ்ரீ குபேர லிங்கேஸ்வரா' பெருமானையும் சிவ வழிபாட்டையும் செய்யுமாறு இறைவன்
நாராயணரின் பரிபூரண அவதார ஐயா வைகுண்டர் கூறுகின்றார்.
ஓம் நமோ ஸ்ரீ குபேர லிங்கேஸ்வராய
மேலும் அவர் அந்த சிவாலயம் ஆனது மலையடிவாரத்தில் தான் தோன்றும் என்றும் அது மிகப்பெரிய ஆலயமாக வளரும்
என்றும் கூறுகின்றார்.
அகிலத்திரட்டு — பக்கம் : 221
தானாக வாழும் தலைவனும் நீயல்லாது
மலையடிவாரம் வளரும் ஒரு விருட்சம்
ஆலயம் அதிலும் பெரிதாய் அது தழையும்
கண்டீரோ.
என்று மலையடிவாரத்தில் தான் அந்த சிவாலயம் வளரும் என்று நேரில் கண்டது போல் கூறுகின்றார். எவ்வளவு பெரிய
ஞானத்திருஷ்டி இது போல் நம்
ஆலயத்தின் அமைவிடம்
'ஸ்ரீ குபேரபுரி' ஆலயமானது கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலின் மிக அருகில் உள்ள ஈசாந்திமங்கலம்
கிராமத்தில் உள்ள வேளிமலையின் அடிவாரத்தில் இதோ நம் 'ஸ்ரீ குபேரபுரி' ஆலயமானது உங்களின் பேராதரவோடு
உருவாகி வருகிறது.
மேலும் அவர் நம் 'ஸ்ரீ குபேரபுரி' ஸ்ரீ குபேர லிங்கேஸ்வரா ஆலயமானது துவங்குவதற்கு மக்கள் செய்ய வேண்டியது
என்ன என்பதை நம் சிவகாண்ட அதிகாரப் பத்திரம் என்னும் நூலில் (பக்கம் : 38):
சிவகாண்ட அதிகாரப் பத்திரம் — பக்கம் : 38
துலங்குதப்பா மேற்பதி தான், துணையாகும் உங்களுக்கு
உபதேசம் சொல்லும் கூலி உடன் கையில் கொடுத்திருங்கோ
பத்திரத்துக்கு எழுத்து கூலி பலரிடம் வாங்கி கொடுத்திடுங்கோ
பள்ளி கணக்கர் எல்லாம் பதிவு குறையாமல் கொடுத்திடுங்கோ
என்னும் நம் 'ஸ்ரீ குபேரபுரி' வளர்ச்சிக்கு நிதி பங்களிப்பு ஆற்ற வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதை உருவாக்குவதற்கு Dr. S. சதீஷ் கிருஷ்ணா தோன்றி வருவார் என்று ஐயா அவரை 'கிருஷ்ணா' நீ இதை உருவாக்க வா
என அழைக்கிறார்.
அகிலத்திரட்டு — பக்கம் : 221
கோடு பல வாதும் கோள் நீச
பாவிகளும் கேடு வரும் காலம்
'கிருஷ்ணா' உன் நற்காலம் — என்றும்
இதை உருவாக்க வரும் 'கிருஷ்ணா' கன்னியாகுமரி மாவட்டத்திலேயே தான் தோன்றுவார் என்பதை:
அகிலத்திரட்டு
வாரி (கடல்) மூன்று கோதி
வளைந்திருக்கும் ஒர் தீவை சாதி
ஒரு நிரப்பாய் தான் ஆள்வாய் உன் காலம் — என்றும்
இவைகள் சம்பவிக்கும் போது உனக்கு 'குருதிசை' எனப்படும் 'வியாழ திசை' நடக்கும் என்றும் உனக்கு உதவும்
அனைவரும் நன்றாக சந்தோஷமாக வாழப்போகிறார்கள் என்றும் கூறுகின்றார்.
தெய்வீக வெளிப்பாடுகள்
அகிலத்திரட்டு — பக்கம் : 228
இதன் மேல் உனக்கு ஏக வியாழம் வருது
சந்தோஷம் ஆகுது காண்
உனைச் சார்ந்த அன்போர்க்கு என்றும்.
இதற்காக வரும் கிருஷ்ணா யார் என்பது குறித்து:
ஐயா வைகுண்டர் அருள்நூல் — பக்கம் : 4
சிவனும் நீ நாதனும் நீ
திருமாலும் நீ மகனே
தவமும் நீ வேதமும் நீ
சங்கம் முதல் எங்கும் நீயே என்றும்
மேலும் நம் ஐயா வைகுண்டர் நானும் நீயும் ஒன்று என்று இவ்வாறு கூறுகின்றார்:
அருள்நூல் — பக்கம் : 4
நினைத்தது எல்லாம் உனக்கு நிசமாகும் என் மகனே
உன்னைத் தள்ளி வேறே ஒரு மூப்பும் யுகத்தில் இல்லை
என்ன நினைத்தாலும், எத்தனைதான் செய்தாலும்
வன்னத் திருமகனே, வகை அதுதான் என் மகனே
நீ செய்தது எல்லாம்
நிரப்புத் தான் என் மகனே
நான் நீயே அல்லாமல்
நடப்பதும் வேறில்லையே — என்றும்
மேலும் 'ஸ்ரீ குபேரபுரியில்' ஸ்ரீ குபேர லிங்கேஸ்வரரின் திருக்கோவில் கட்டி சிவனை வழிபடுவேன் என்பதை:
அருள் நூல் — பக்கம் : 4
மகனே தவத்துள் இருக்கையிலே
வருமோ செல்வம் ஆர்க்கும்
செகம் ஏழும் அறிய தவம் முடித்து
சென்றால் சிவன் உனக்கு அகம் மகிழ்ந்து
தவமே நினைத்த முறைபடியே
சகல கருமம் கை கூடும் — என்றும்
ஸ்ரீ குபேர லிங்கேஸ்வரா தியான மையம்
அங்கிருந்து நீங்கள் செய்த பழைய கர்ம வினைகளை நீக்குவதற்காக 'ஸ்ரீ குபேரபுரி' 'ஸ்ரீ குபேர லிங்கேஸ்வரா
தியான மையம்' நடத்துவேன் என்பதையும், அங்கே நீங்கள் சீராக வந்து என் வகுப்பை கேட்டு உங்கள் கர்மாக்களை
தொலைத்து நீங்கள் அழியாத ஆன்மாக்களாக ஆன்ம நிலை ஓங்கிட உங்களை உயர்த்திட வருவேன் என்று இவ்வாறு
கூறுகின்றார்.
அகிலத்திரட்டு — பக்கம் : 213
நாராயணர் புவியில் நல்லமக்கள் ஏழ்வரையும்
சீராக வந்தேற்று செய்த வினையும் நீக்கி
ஊழிக் காலம் உயிரழியா வண்ணமுந்தான்
ஆழிக் கரையான் மகவு அரசாள்வார்
என்னுடைய இந்த சத்தியமான அதிசயமான வார்த்தைகளை கேட்டு மனத்தூய்மையுடன் என்னிடம் அடைக்கலமாக வந்த மக்களான
உங்களை நான் 'புதிய உலகில்' நிரந்தரமாக வாழ வைப்பதற்காக உங்கள் மொத்த கர்மாக்களையும் தொலைக்க வைத்து
உங்களை வாழ வைக்க 'மங்களமான சிவனுக்கு' நான் கட்டும் 'ஸ்ரீ குபேரபுரி' ஸ்ரீ குபேர லிங்கேஸ்வரா
திருக்கோவிலுக்கு உங்களால் முடிந்த அளவு உதவுங்கள் என்பதை இவ்வாறு கூறுகின்றார்.
அகிலத்திரட்டு — பக்கம் : 206
நீங்கள் என்ன குற்றம் நிலையில்லா செய்தாலும்
தாங்கி பொறுப்பேன் தருவேன் நான் நல்ல புத்தி
உங்கள் கர்மம் எல்லாம் ஒக்கத் தொலைப்பதற்கு
மங்களமாய் சிவனை வருத்தி, தவசு பண்ணி
நான் உங்களாலே நல்ல தவசிருந்து
மானுவங்கள் கெட்ட மகாகலியன் யுகத்தில்
தாயும் தகப்பனையும் தான் பழித்த கலியுக வார்த்தைகளை உணர்ந்து உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும்
புரியவைத்து என்னுடைய இந்த
ஜன்ம பிறப்பும் என் முன் ஜன்ம பிறப்பும் எனது இனி வரும் பிறப்புகளும் மக்களுக்கு உணர்த்தி எம்முடைய
இந்த
தொண்டிற்கு உங்கள் உள்ளத்தால் பல்வேறு தொண்டுகள் புரிய வேண்டும் என்பதை ஐயா வைகுண்டர் இவ்வாறு
கூறுகின்றார்.
அகிலத்திரட்டு — பக்கம் : 201
என் பிறப்பும் என் மாது இது முன் பிறப்பு முதல்
பின்பிறப்பு முதலாய் பேசு
இதற்காக நாளும் பல ஊழியங்கள் நமக்கு மிகச் செய்திடுங்கோ
ஏவல் கொண்டு உங்களை நாம் இரட்சித்து ஆண்டுகொள்வோம் — என்றும்
புதிய உலகம் படைக்க வாருங்கள்
தொடர்ச்சி
மேலும்
நான் வந்து உங்களையும்
நாட்டமுடன் எடுத்து
மானொத்த தர்ம வையகத்தில்
வாழ வைப்பேன் ...
நான் வந்து உங்கள் அனைவரையும் தர்ம உலகமான புதிய உலகில் வாழ வைக்கப் போகின்றேன். அதற்காக:
வைகுண்ட வாக்கு
கலிக்குள் அகப்பட்டோர்
கடந்து கரை ஏறவென்றால்
வரிக்கு வலுவான
வகையல்லோ வேணுமையா
தீட்டுக்குள் சென்றால்
திரும்பக் குளியாமல்
வீட்டுக்குள் போவாமோ
மேதினியோர் நாமறிய
என்ற வைகுண்ட வாக்கிற்கு இணங்க இந்த கலி மாயைக்குள் அகப்பட்டுள்ள அகில உலகத்தாரையும் கரை ஏற்றி புதிய
உலகில் வாழ வைக்க உடனே விரைந்து வாருங்கள் நம் 'ஸ்ரீ குபேர புரியை' உலகின் தலைசிறந்த பட்டணமாக மாற்ற
என்னோடும் பரம்பொருள் இறைவன் 'ஸ்ரீ குபேர லிங்கேஸ்வரோடும்', இணைந்து தோள் தந்து இறைவன் நல்கும் இன்ப
உலகாம் இனிய உலகாம் புதிய உலகம் படைத்து அதில் மாள் வர வாழ்வு வாழவே வா, மலைகளையும் என்னோடு
பொடியாக்கும் மார்போடும் மண்ணையும் விண்ணாக்க தினவெடுத்த தோளோடும் எவர் கூறினும் உண்மைக்காய் உயிர்
கொடுக்கும் எமனையும் காற்றினில் பறக்கவிடும் மானம் மிகு மறத் தமிழனே..... நீ ........
என்னோடு வா புதிய உலகம் படைக்க வா ..... வா .....
அதற்காக இப்போது நாம் புதிய தோர் பதியாம் பொன்னம் பதியாம் வைர நற் பதியாம் நாற்புறச் சோலை சூழ்
பதியாம்
'ஸ்ரீ குபேரபுரி' பதியையும் அங்கே 'ஸ்ரீ குபேர லிங்கேஸ்வரா' ஆலயத்தினையும்
உடனே உருவாக்கிடவே ஓடோடி — விரைந்து வா உடனே வா
ஸ்ரீ குபேரபுரி நோக்கியே .......
நம் 'ஸ்ரீ குபேரபுரி'-யின் அமைவிடம்
உலகை ஒர் குடைக்குள் ஆள்பிறந்த இந்துக்களே இந்த தெட்சண பூமிக்கு இந்த வேளிமலையும் நம் முன் காணும்
பொதிகை சூழ் மகேந்திரகிரி பர்வதமும் இன்று நாம் வணங்கும் இறை வடிவங்களான அப்பன் ஆதிசிவன் அம்மை
சக்தி
மற்றும் ஆதி மூலம் நாராயணர் ஆதிலட்சுமி தாயார் முருகபெருமான் எனப்படும் சுப்பிரமணியர், வள்ளி தேவி,
ஸ்ரீ
மகா பரசுராமர், தமிழ் மாமுனி அகத்தியர், போகர், கொங்கணர், ஸ்ரீ பகவான் கிருஷ்ணர், பஞ்சபாண்டவர்கள்,
ஸ்ரீ
ராமர் தாடகையை கொன்ற தாடகை வனம் (தற்போது தாடகை மலை), அவர் தரிசனம் நல்கிய தரிசனம்தோப்பு (தற்போது
தரிசனம்கோப்பு) திரிசூரன் எனப்படும் முத்தலை அசுரனிடம் அவர் வில் கீறிய வில்லுக்கீறி (தற்போது
வில்லுக்குறி), கண்டேன் அவளை என்ற கண்டன்விளை, ராமன்பூதூர், ராமன்பறம்பு, ராமன்கரை, சீதைக்கரை
(வள்ளியாற்றின் கரையில்) ராமன்துறை, மலையில் சீதாகல் (தற்போது சீதப்பால்), கன்னியாகுமரி பகவதி
அம்மனும்,
சுவாமிதோப்பில் அகில பேரொளி ஐயா வைகுண்டரும், மண்டைக்காட்டு அன்னை பகவதியும், கொல்லங்கோட்டில் அன்னை
ஸ்ரீ பத்திரகாளியும், குமார கோவிலில் முருகபெருமானும், காளிகேசத்தில் அன்னை மகாகாளியும்,
ஆலங்சூடியில்
திருவேங்கட நயினாராக பெருமாளும், திருவட்டாரில் பாற்கடல் வாசனாக வைகுண்டரும் வாழ்ந்த இந்த மண்ணின்
நடுவே
உள்ள ஈசனின் ஆனந்த மங்கள பூமியான ஈசாந்திமங்கலத்தின் 'ஸ்ரீ குபேரபுரி'-யில் தான் நம் ஆலயம்
உருவாகிறது.
குறிப்பு: நம் 'ஸ்ரீ குபேரபுரி'-யின் மிக அருகில் உள்ள (2 கி.மீ)
தரிசனம்தோப்பில்
தான் ஸ்ரீராமர் குழந்தையாக விசுவாமித்திரருடன் வந்து தாடகை மலையில் வைத்து தாடகையை கொன்ற பாவம்
தீர்ப்பதற்காக முதல் சிவலிங்கம் வைத்து வழிபட்ட 'ராகவேஸ்வரா' திருக்கோவில் உள்ளது.
இப்போது இங்கே உருவாவது 'ஸ்ரீ குபேர லிங்கேஸ்வரா' ஆலயம் மட்டும் அல்ல நீங்களும் இந்த உலகின் ஒவ்வொரு
ஆன்மாவும் வேண்டிய தேடிய தர்மயுக யாத்திரைக்கான முதல் படியே இந்த 'ஸ்ரீ குபேர லிங்கேஸ்வரா'
திருக்கோவில்
என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் உங்களால் இயன்ற திருப்பணியை ஆதி மூலத்தின் ஆலயத்திற்கு செய்துதர
வேண்டுகிறோம்.
எதிர்கால திட்டங்கள் (Future Plans)
'ஸ்ரீ குபேரபுரி'-யில் ஆதியில் இருந்து, இடையில் அழிந்து இப்போது துவங்கப்போகும் ஆலயங்களாவன:
- 1. சப்த கன்னியர் ஆலயம்: உலக மக்களை உருவாக்கிய தாய்மார்களான சப்த கன்னியர்
ஆலயம்
— கன்னிமார்ச் சோலை (அகில உலக மனித குலம் முதன் முதலில் தோன்றிய இடம்).
- 2. திரு வேங்கட நாராயணர்: இந்திய கன்னியர்கள் திருவயிற்றில் மனித குலத்தை
தோற்றுவித்த இறைவன் நாராயணரின் திருக்கோவில் — திரு வேங்கட நாராயணர்.
- 3. ஸ்ரீ முருகன் குன்றம் திருக்கோவில்: குன்றின் மேல் வாழும் குமரனாம் முருக
பெருமானின் அவர் உயிரோடு வாழ்ந்த வீடு — ஸ்ரீ முருகன் குன்றம் திருக்கோவில்.
- 4. ஸ்ரீ சாஸ்தா குன்றம் திருக்கோவில்: முருகபெருமானின் தம்பி ஸ்ரீ தர்மசாஸ்தா
உயிரோடு வாழ்ந்த வீடு — ஸ்ரீ சாஸ்தா குன்றம், திருக்கோவில் ஆகிய தெய்வீக ஆலயங்களும் துலங்க
உள்ளன
உங்கள் பேராதரவோடு.
இப்படிக்கு,
ஸ்ரீ குபேர லிங்கேஸ்வரா திருக்கோவில் நிர்வாகிகள்